மகளிருக்கு உரிமைத்தொகை காத்திருக்கு..
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்”
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா கோவையில் இன்று நடக்கிறது. ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர், தூய்மை பணியாளர் வாரிய தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர்,துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்,மண்டல குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டு வழங்க உள்ளார்கள்.
