மதுக்கரையில் வாகனத்தில் சென்றவரை கடித்து குதறிய கருஞ்சிறுத்தை ..!
கோவை பாலக்காடு மெயின் தோடு ரோடு மதுக்கரை குவாரி காலனி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க நபர் இன்று இரவு எட்டு மணியளவில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதி ஊருக்குள் இருந்து வேகமாக வந்த கருஞ்சிறுத்தை அந்த நபர் மீது பாய்ந்தது. கை மற்றும் வயிறு பகுதியில் கடித்து குதறியது. அதிர்ச்சியில் அந்த நபர் கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கல் எடுத்து வீசி சிறுத்தையை விரட்டினர். சிறுத்தை அந்தப் பகுதியில் உள்ள சிமெண்ட் நிறுவனம் காலி இடத்தை நோக்கி வேகமாக ஓடியது. இது தொடர்பாக மதுக்கரை போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அங்கே சென்று சிறுத்தையை தேடி வருகின்றனர். காயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .இது தொடர்பாக மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கருஞ்சிறுத்தை கடந்த சில நாட்களாக மதுக்கரை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சுற்றி வருகிறது. இது நாய் மற்றும் கோழிகளை வேட்டையாடி வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புகார் வந்தும் வனத்துறையினர் அதை பிடிக்காமல் தொடர்ந்து வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
