மனைவியை கொலை செஞ்சா செங்கல் சூளை தரேன்
கோவை மாவட்டம் தடாகம் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் 51 வயதான கவி சரவணக்குமார் . இவர் மனைவி மகேஷ்வரி . கடந்த 15 வருடங்களாக கார் ஓட்டுநராக இவர்களிடம் பணிபுரிந்து வருபவர் சுரேஷ்-49
இவர் 28.10.25 அன்று 12.00 மணிக்கு கோவை மாநகரம் வடவள்ளி காவல் நிலையத்தில் மகேஸ்வரியை அவரது வீட்டில் வைத்து கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி மகேஸ்வரியின் கணவர் கவிசரவணன் என்பவருடன் வடவள்ளி காவல் நிலையத்தில் வந்து சரண்டர் ஆனார். சுரேஷிடம் விசாரித்த போது அவர் தனது முதலாளி கவிசரவணன் என்பவரிடம் கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருவதாகவும் கவிசரவணன் 5 வருடங்களாக தடாகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வந்ததாகவும் இதனால் சரவணகுமார் மற்றும் மகேஸ்வரி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இறந்து போன மகேஸ்வரிக்கு தேவையான வீட்டு ஜாமான்களை சுரேஷ் வாங்கி வந்து கொடுத்தும் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.இந்நிலையில் மகேஸ்வரியிடம் அவரது வீட்டிற்கு வந்து 28.10. 25 காலை சுமார் 9.15 மணிக்கு மகேஸ்வரியிடம் கவிசரவணனை அழைத்து பேசும்படி கூறியதாகவும் அப்போது மகேஸ்வரி அவரை திட்டியதாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த சுரேஷ் கத்தியால் மகேஷ்வரியின் வலது பக்க கன்னம் மற்றும் வலது பக்க கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டதாக வடவள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சுரேஷ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் 12.11.25 அன்று மேற்கண்ட கொலை வழக்கில் சுரேஷை நீதிமன்றத்தின் மூலம் தடாகம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது சரவணகுமாரின் மனைவி மகேஷ்வரி விவாகரத்து தர மறுத்து வருவதால் அவளை கொன்றுவிடுமாறும் உனக்கு வழக்கு செலவையும் திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள கவி சேம்பரையும் தருவதாக ஆசை வார்த்தை கூறியதன் பேரில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சரவணகுமாரையும் கைது செய்து மேற்கண்ட கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
