மாசம் 5 ஆயிரம் போதுமா..? கோவையில் சிறப்பாசிரியருக்கு புகார்..!
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி இன்று இல்லம் தேடி கல்வி சிறப்பாசிரியர்கள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர்
ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பாசிரியர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் இன்று புகார் மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முன் பருவ கல்வி ஆசிரியர்கள் நல சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட மனுவில், “சமூதாயத்தின் மேண்மைக்காக கொரானா காலகட்டத்தில் இடைநிற்றல் கல்வியை ஈடுசெய்ய தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு இல்லம் தேடிக்கல்வி என்னும் திட்டத்கை கொண்டு வந்தது .
அதில் தன்னார்வலர்களாக பணிபுரிந்தோம். எங்களுக்கு ஊக்கத்தொகையாக ஆயிரம் ரூபாய் தரப்பட்டது தன்னார்வலர்கள் என்ற படியில் இருந்து ஒருபடி உயர்த்தி கடந்த 29.09.2022ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மூலமாக சிறப்பாசிரியர்கள் (எல்கேஜி, யுகேஜி) என்ற அங்கீகாரத்தை கொடுத்தது தமிழக அரசு.
ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் 2022-2023 ம் கல்வி ஆண்டு முதல் 2381-முன்பருவக் கல்வி ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். முன்பருவக் கல்வி ஆசிரியர்கள் கற்பித்தலின் காரணமாக ஒன்றாம் வகுப்புக்களில் அதிக மாணவர்கள் சேர்ந்ததாக தொடக்க கல்வி இயக்குநகரம் ஒப்பு கொண்டுள்ளது. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
காலை 9 மணியிலிருந்து மதியம் 12:45 மணி வரை கற்பித்தல் இருந்தாலும் பல பள்ளிகளில் முழுநேரமும் பெற்றோர்களின் விருப்பத்திற்காக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியம் ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்த ஊதியம் என்பது மிகவும் குறைவாக உள்ளது.
மாத ஊதியம் 25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும். மே மாதம் ஊதியம் வழங்குவதில்லை. அந்த மாத ஊதியம் தர வேண்டும் என தெரிவித்தனர்.
