மாணவியிடம் மானங்கெட்ட செயல்.. ஏட்டுக்கு ரிவீட்டு..

சென்னையிலிருந்து கோவைக்கு இரவு ரயிலில் கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அப்போது அருகே அமர்ந்திருந்த நடுத்தர வயது நபர் தூங்குவது போல் நடித்து அந்த மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அந்த மாணவி எச்சரித்தும் அந்த நபர் திருந்தவில்லை.
இந்த நிலையில் மாணவி தன்னிடமிருந்த செல்போனில் அந்த நபரின் சேட்டைகளை வீடியோ பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் கோவை போலீசருக்கு தகவல் தெரிவித்தார். கோவை ரயில் நிலையம் வந்து இறங்கிய அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் ஆர் எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றும் ஷேக் அப்துல்லா என தெரிய வந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
