மாணவி பலாத்கார வழக்கில் மூன்று பேரிடம் விசாரணை

கோவை பீளமேடு விமான நிலையம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் கல்லூரி மாணவி கடந்த இரண்டாம் தேதி தனது ஆண் நண்பருடன் நள்ளிரவு நேரத்தில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சுமார் 25 வயதான கருப்புசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா ஆகியோர் அங்கே மது போதையில் ஆண் நண்பரை தாக்கி விட்டு மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்திருப்பதாக தெரியவந்தது .இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர் .

மூன்று பேர் தப்பி ஓட முயன்றதாக கூறி போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த மூன்று பேரும் மருத்துவ சிகிச்சை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூன்று பேரையும் கஸ்டடி எடுத்து விசாரிக்க பீளமேடு போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டு மூன்று பேரையும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் மூன்று பேரையும் இன்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மூன்று பேரும் முகத்தை மூடியபடி ஸ்ட்ரக்சரில் விசாரணைக்கு வந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *