மாதிரி ஓட்டு பதிவு முடிஞ்சிருச்சு மெஷின்களுக்கு சீல் வைப்பு
கோவை மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள 19521 ஓட்டு மிஷின்கள் சரியாக இயங்கி வருகிறதா என சரி பார்க்கும் பணிகடந்த ஒரு மாதமாக நடந்தது. இந்த பணி நிறைவடைந்தது. 397 மிஷின்கள் பழுதான நிலையில் இருந்தது தெரிய வந்தது. இந்த மிஷின்கள் நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றும் இன்றும் அரசியல் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. மூன்று கட்டமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. 200 மெஷின்களை வைத்து ஓட்டு பதிவு நடத்தினர். இதில் ஒவ்வொரு மெஷினிலும் 16 பட்டன்கள் சரியாக இயங்குகிறதா சின்னங்கள் பதிவாகிறதா மொத்த எண்ணிக்கை சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. ஓட்டு பதிவு சோதனை அனைத்தும் முடிந்த நிலையில் மிஷின்கள் மீண்டும் ஸ்ட்ராங் ரூம் பகுதியில் வைத்து மூடப்பட்டது.
இந்த வளாகத்தில் உள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டது. இங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
