மேட்ரிமோனியல் பழகி பெண்ணிடம் உல்லாச லீலை..

கோவை இருகூர் பகுதியை சேர்ந்த 32 வயதான பெண், டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். இவரது கணவர் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்த நிலையில், இரண்டு குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.
சமீபத்தில் ஆன்லைன் மேட்ரிமோனியில் வரன் தேடியபோது, திருப்பூரை சேர்ந்த 40 வயதான ராம்குமார் என்ற நபர் தொடர்பு கொண்டுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த ஒரு ஆண்டாக பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார். பிசினஸ் செய்கிறேன் தொழிலுக்கு பணம் தேவை என 20 லட்ச ரூபாய் வரை வாங்கி உள்ளார்.
திருமணம் செய்கிறேன்
என கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், ராம்குமாரின் பர்ஸில் இரண்டு ஆதார் அட்டைகள் இருப்பதை பார்த்ததால் சந்தேகம் அடைந்த பெண் விசாரித்தபோது அவர் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த நபர் மோசடியாக மேலும் சில பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பின் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
