மைசூர் ஆன மகிஷப்பட்டினம்

கொங்கு நாட்டின் வட எல்லையில் அமைந்த மலைகள் சூழ்ந்த பகுதி எருமையூர் என அழைக்கப்பட்டது. சங்க கால செய்யுள்களில் இந்த பகுதியை நாரரி நறவின் எருமையூரன், பேரிசை எருமை நன்னாடு, நுண்பூண் எருமை குடநாடு குறிப்பிட்டுள்ளார்கள். எருமை நாட்டில் இருந்து பாய்ந்த காட்டாறு அயிரி என அழைக்கப்பட்டது .
அயிரை யாற்றடை கரை வயிரியின் நரலும் காடு என அயிரி ஆற்றை பற்றி பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் . தலையாலங்கானம் என்ற ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும் போர் செய்த போது. சோழ சேரர்களுக்கு எருமையூரன் உதவியாக கூறப்படுகிறது. ஹொய்சள அரசர் காலத்தில் எருமையூர் என்ற பெயர் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எருமை என்பதற்கு சமஸ்கிருதத்தில் மகிஷம் என்ற பெயர் உள்ளது மகிஷ பட்டணம் அபூர்வ கட்டடங்கள் நிறைந்த பகுதி இங்கே வரலாற்று சின்னங்கள் ஏராளமாக பாதுகாக்கப்பட்டுள்ளது .பிற்காலத்தில் மகிஷ பட்டணம் மைசூர் என மாறியது . கொங்கு நாட்டின் எல்லையில் இருந்து இந்த ஊர் பிரிந்து கர்நாடக எல்லைக்குள் சென்றது மகிஷ பட்டணமாக இருந்த போது அயிரி என அழைக்கப்பட்ட ஆறு மைசூரான பின்னர் பெரியாறு என மாறியது.
