ரயில்வே டிராக்குல போகாதீங்க …

வட கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பாதையை கடக்க நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நடை மேம்பாலத்தை பெரும்பாலான பயணிகள் பயன்படுத்துவதில்லை. கூட்டமாக பயணிகள் ரயில் பாதையில் நடந்து சென்றே கடக்கின்றனர். குறிப்பாக ரயில் நிலையத்திலிருந்து கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு நோக்கி செல்பவர்கள், வட கோவை மேம்பாலம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி செல்பவர்கள் 2 ரயில் பாதைகளை கடந்து செல்கிறார்கள். சில நேரங்களில் சரக்கு ரயில் நிற்கும் போதும் அதற்கு இடையே புகுந்து செல்கிறார்கள். இது போன்ற ஆபத்தான கடவுகளை தவிர்க்க நடை மேம்பாலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நடை மேம்பாலத்தில் ஏறி இறங்கி செல்ல தாமதம் ஏற்படுவதால் ரயில் பாதையில் இறங்கு சிறிது தூரம் நடந்து கடந்து செல்கிறார்கள். இங்கே ரயில் பாதையை கடக்க கூடாது என அறிவிப்பு வெளியிட்டும் இந்த விதி மீறல் தொடர்கிறது.

இது தொடர்பாக பயணிகள் கூறுகையில், “திருப்பூரிலிருந்து கோவை நோக்கி வரும் பாசஞ்சர் ரயில் சுமார் காலை 10 மணிக்கு வட கோவை ரயில் நிலையம் வருகிறது. இங்கேயிருந்து இறங்கி அலுவலகத்திற்கு விரைவாக செல்ல மேம்பாலத்தை பயன்படுத்தினால் 5 நிமிடம் தாமதமாகி விடும். மேலும் மேட்டுப்பாளையம் ரோடு செல்ல நடை மேம்பாலம் கிடையாது. ரயில் கடந்து சென்ற பின்னரே நாங்கள் பாதையை கடக்கிறோம், என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *