ரேஸ் கோர்ஸ் நியூ இயர் பார்ட்டிக்கு கட்டுப்பாடு
கோவை ரேஸ் கோர்ஸ் வாக்கிங் ஏரியா மற்றும் மீடியா டவர் பகுதியில் தினமும் ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள். இதேபோல் ஆர் எஸ் புரம் ஸ்மார்ட் சிட்டி கிளாக் டவர் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் தினமும் அதிகமாக உள்ளது
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கூட்டமாக குவிந்து பார்ட்டி கொண்டாட உள்ளனர். குறிப்பாக டான்ஸ் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடக்க உள்ளது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருக்கிறது. தங்களிடம் முறையான அனுமதி பெற்று இந்தப் பகுதி ரோட்டில் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். தன்னிச்சையாக யாரும் எதுவும் செய்யக் கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு கொடுத்துள்ளனர்.
