லவ் பண்ண மாட்டியா என மிரட்டி மாணவிக்கு கத்தி குத்து..!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 17 வயதான சிறுமி முதல் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த 18 வயது மாணவருக்கும் நட்பு இருந்தது. இந்த நிலையில் மாணவர் தன்னுடன் பழகிய மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதை அந்த மாணவி ஏற்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக மாணவர் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்துள்ளார். மாணவி காதலை நிராகரித்ததால் கோபமடைந்த மாணவர் இன்று அவரிடம் பேசுவதாக கூறி வாக்குவாதம் செய்தார். பின்ன தன்னிடம் இருந்த கத்தியால் மாணவியை குத்திவிட்டார். இதில் காயமடைந்த மாணவியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
