லைசென்ஸ் புதுப்பிக்க துப்பாக்கியுடன் குவிந்த உரிமை தாரார்கள்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துப்பாக்கி பயன்படுத்துவோர் தங்களது துப்பாக்கி லைசென்ஸ் புதுப்பிக்க இன்று அதிகளவு குவிந்தனர். துப்பாக்கியுடன் உரிமை தாரர்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம்(பொது )துப்பாக்கி மற்றும் ஆவணங்களை காண்பித்து தங்கள் மீது துப்பாக்கியின் மூலமாக எந்த குற்றங்களும் இல்லை என தெரிவித்து உரிமம் புதுப்பித்து சென்றனர். பெரும்பாலான நபர்கள் ஏகே ரக துப்பாக்கிகளை வைத்திருந்தனர். பண்ணை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் சிலர் துப்பாக்கி பெற்றிருந்தனர். லைசெனஸ் புதுப்பிக்க காத்திருந்தபோது உரிமை தாரர்கள் புது மாடல் துப்பாக்கி தொடர்பாக தங்களுக்குள் விசாரித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *