வந்தார் எம்ஜிஆர்…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வெள்ளைத் தொப்பி சால்வையுடன் எம்ஜிஆர் நேற்று வந்திருந்தார். அவரைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியத்துடன் நீங்களா எப்போது வந்தீர்கள் என விசாரித்தனர். ஏதோ சினிமா படமா எம்ஜிஆர் கெட்டப் போட்டு நடிக்கிறார்களா என அங்கிருந்தவர்கள் கேட்டனர். அப்போது எம்ஜிஆர் தோற்றத்தில் வந்தவர் பெயர் அமர்நாத் என்பது தெரியவந்தது. தீவிர எம்.ஜி.ஆர். ரசிகரான அவர் எப்போதும் எம்ஜிஆர் தோற்றத்தில் பொது இடங்களுக்கு வந்து செல்வதை வழக்கமாம். இவர் சினிமா படங்களில் டூப்ளிகேட் எம்ஜிஆர் ஆகவும் நடித்திருக்கிறாராம்.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம்ஜிஆர் எம்ஜிஆர் தான். அவர் தோற்றத்தில் யார் வந்தாலும் தனி மரியாதை வழங்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
