வரும் ஜனவரி கடைசியில் மேற்கு பைபாஸ் ரோடு திறப்பு..
கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை பதினொரு கிலோமீட்டர் தூரத்துக்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரோடு பணி முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் கோவைப்புதூர் சுண்டக்காமுத்தூர் கரடிமடை பேரூர் செட்டிபாளையம் மாதம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் இந்த ரோடு அமைக்கப்பட்டு இருக்கிறது.
மைல்கல் பகுதியில் மட்டும் மேம்பாலம் பணி முடியவில்லை. இந்த பைபாஸ் ரோடு வழியாக கோவை கொண்டாட்டம், ஈசா யோக மையம் சிறுவாணி அடிவாரம் சாடி வயல், கோவை குற்றாலம், வெள்ளிங்கிரி மலை, நரசிபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி, மருதமலை கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு எளிதாக சென்று வர முடியும்.
பசுமைவழிச் சாலையாக அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த ரோடு வரும் ஜனவரி கடைசி வாரத்தில் திறந்து வைக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
