வரும் 16ம் தேதி டாஸ்மாக் கடை லீவு
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும்
மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று மூட உத்திரவிடப்பட்டுள்ளது.
மதுபான விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
