வாக்காளர் பிரச்சனை தீர்க்க ஹெல்ப் டெஸ்க் 1950..

தமிழக அளவில் வாக்காளர்கள் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஹெல்ப் டெஸ்க் என்ற வாக்காளர்கள் உதவி மையம் துவக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிக்கு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் நேற்று துவக்கப்பட்டது.

இதில் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா இல்லையா.

பட்டியலில் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் தருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *