வாக்கு சாவடி மையங்களில் இரு நாட்கள் உதவி மையங்கள்..
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூய்மையான வாக்காளர் பட்டியலினை தயார் செய்திடும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமுறை 2026-ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 04, 2025 அன்று தொடங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கணக்கீட்டுப் படிவத்தினை அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களுக்குள்ள சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் மற்றும் வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2002/2005 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களைக் கண்டறிவதில் வாக்காளர்களுக்கு உதவி செய்திடும் வகையிலும் 15.11.2025 சனிக்கிழமை மற்றும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் (Designated Locations) உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
இந்நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களில் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை பணியில் இருப்பர். இப்பணிக்கு பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் தன்னார்வலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இம்முகாமில் வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்திட பொதுமக்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உதவி புரிவர். மேலும், வாக்காளர்கள், அவர்களது தாய்,
தந்தையர் அல்லது தாய், தந்தையரின் பெற்றோர் ஆகியோரது பெயர்கள் கடந்த 2002/2005 ஆம் ஆண்டு தீவிரத்திருத்தப் பட்டியலின் போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண் ஆகிய விவரங்களை கண்டறியவும் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் உதவி செய்வர். எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமினை கேட்டுக் தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கொள்ளப்படுகிறது. எனவே இவ்வாய்ப்பினை கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் https://voters.eci.gov.in// என்ற இணையதள வழியாகவும் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்பி சமர்பிக்கும் வசதி உள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
