கோவை வடக்கு தொகுதி மக்களுக்கு வழிகாட்டும் அதிமுக..!
கோவை வடக்கு தொகுதி வட்டாரத்தில் அனைத்து பகுதி மக்களின் நம்பிக்கை முகமாக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் வலம் வருகிறார்.
தீவிர அரசியலில் இருந்து விலகி பின்னர் தீயாய் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார். சீரநாயக்கன்பாளையம் , வடவள்ளி, மருதமலை, பொம்மனாம்பாளையம், ஓனாப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறார்.
உடல் நலம் பாதித்தவர்களுக்கு, கல்வி கற்க வழியில்லாதவர்களுக்கு உதவி வருகிறார். பொம்மனாம் பாளையம் தேவராஜ் என்பவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை கொலை செய்து சிறைக்கு சென்று விட்டார். இரண்டு பெண் குழந்தைகள் ஆதரவின்றி அனாதையாக தவித்தனர்.
ஓடி சென்று பார்த்த சந்திரசேகர் சிறுமிகளின் பாட்டிக்கு ஆறுதல் தைரியம் கூறினார்.
குழந்தைகளின் கல்வி மற்றும் பல்வேறு தேவைகளுக்கு உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து அவர்கள் கல்வி கற்க ஏற்பாடு செய்தார்.
இதேபோல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பொண்ணு குட்டி, இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வசதியின்றி தவித்த துப்புரவு பெண் தொழிலாளி உள்பட பல்வேறு ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகளை கேட்காமல் தேடிச்சென்று வழங்கியுள்ளார். அவரின் சேவையால் வடக்கு தொகுதி மக்களின் வாடிய முகங்கள் மலர துவங்கி உள்ளது.
