விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பேன்.. சண்முக பாண்டியன் பேட்டி

கோவை சினிமா தியேட்டரில் கொம்பு சீவி சினிமா திரைப்படம் வெளியானது. இதன் பிரமோசனுக்கு படத்தின் ஹீரோ விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் வந்திருந்தார்.

அப்போது அங்கே வந்திருந்த ரசிகர்கள் சண்முக பாண்டியனுக்கு தடபுடலாக வரவேற்பு தந்தனர். அப்போது பேசிய சண்முக பாண்டியன் எனது அப்பா விஜயகாந்த் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மிகுந்த ஆர்வமாக எதிர்பார்ப்பில் இருக்கிறேன். ஆனால் அதற்கேற்ற டைரக்டர் அமைய வேண்டும். இது நடந்தால் கேப்டன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பேன்.

கொம்பு சீவி படம் எனக்கு நன்றாக அமைந்துள்ளது சரத்குமார் சார் நல்ல அனுபவத்தை எனக்கு கொடுத்தார். அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க கதைகளை கேட்டு வருகின்றேன். எனக்கு சினிமா தான் ஆசை . அரசியலுக்கு செல்ல மாட்டேன் என்றார். அப்போது பெண் குழந்தை ஒன்றுக்கு விஜயலதா என பெயர் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *