வீட்டை இடிக்காதீங்க. . கலெக்டரிடம் மக்கள் புகார்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அன்னூர் குமரபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்றுபுகார் மனு அளித்தனர். இந்த மனுவில் எங்கள் பகுதியில் 25 வீடுகளை இடிப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ரோடு அகலப்படுத்தும் பணிக்காக வீடுகளை காலி செய்ய வேண்டும் .உங்களுக்கு வேறு இடத்தில் மனை இடம் தருகிறோம் என தெரிவித்தனர். வேடர் காலனியில் இடம் வழங்க போவதாக கூறியிருக்கிறார்கள் . அது வன எல்லை பகுதியாக இருப்பதால் அங்கே வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படும் நிலைமை இருக்கிறது .

வேறு இடத்தில் இடம் தர வேண்டும் என கேட்டு இருக்கிறோம் அதற்கு முன் எங்கள் வீடுகளை இடிக்க கூடாது என கோரிக்கை விடுத்து கலெக்டரை சந்திக்க வந்தோம் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *