வெள்ளரிக்காய் விளைச்சல் ஆஹா ஓஹோ…
கோவை மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் பசுமைக்குடில் அமைத்து, உயர் தொழில்நுட்ப நீரியல் வளர்ப்பு முறையில் வெள்ளரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயி செல்வராஜ் என்பவரின் தோட்டத்தில் 16.88 லட்ச ரூபாய் மானியத்துடன் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப பசுமை குடில் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்துள்ளதை கலெக்டர் பார்வையிட்டார்.
இதில் தோட்டக்கலை துணை இயக்குநர் சித்தார்த்தன், நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறுகையில், “தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற உயர் தொழில்நுட்ப திட்டங்களின் மூலம் பட்டதாரி விவசாயிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் குறைந்த இடத்தில் அதிக லாபம் ஈட்ட முடியு. வரும் ஆண்டுகளில் இதுபோன்ற சிட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிக விவசாயிகள் உயர் தொழில் நுட்ப பசுமைகுடில் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் பரப்பு *அதிகரித்தல், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பு பசுமைக்குடில் அமைக்கல், நிழல்வலை கூடாரம், நிலப்போர்வை அமைத்தல் ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, தரம் பிரித்து சிப்பம் கட்டும் அறை, வெங்காய சேமிப்புக் கிடங்கு, நடமாடும் விற்பனை ஊர்தி ஆகிய அறுவடைக்கு பின் செய் நேர்த்தி இனங்கள், மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள், தேனீ காலனிகள், தேன் எடுக்கும் இயந்திரங்கள் வழங்குதல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மானியம் வழங்குதல் உள்ளிட்ட வகையில் கடந்த 4.5 ஆண்டுகளில் ரூ.15.38 கோடி மதிப்பில் 9105 பேர் பயனடைந்துள்ளனர், ” என்றார்.
