வெள்ளலூர் பேரு எப்படி வந்துச்சு தெரியுமா..

கொங்கு நாட்டின் சிறப்பு மிக்க ஊர்களில் வேளீர் ஊர் குறிப்பிடத்தக்கது. 1842, 1871, 1932ம் ஆண்டில் இந்த ஊரில் பூமியில் பல்வேறு இடங்களில் புதையல் கிடைத்தன. ஒரு இடத்தில் கிடைத்த புதையலில் 1212 ரோமானிய காசுகள் இருந்தன. அகஸ்டஸ். திபிரியஸ் காலத்தை சேர்ந்த இந்த காசுகளை தொல்லியல் ஆராய்ச்சி துறையினர் சேகரித்து பாதுகாத்து வருகின்றனர் .

இந்த காசு முதல் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கூறப்படுகிறது . இதன் மூலமாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று பெருமை கொண்டதாக வேளீர் ஊர் இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வேளிர் ஊர் நாளடைவில் பெயர் மருவி வெள்ளலூராக மாறியது. இந்த ஊரில் வரலாற்று பெருமை மிக்க எமதர்மன் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் தேனீஸ்வரர் கோயில் உள்ளது .

தேனீஸ்வரர் கோயிலின் நடு சன்னதி முன் மண்டபத்தின் கிழக்கு நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் கொங்கு சோழன் விக்ரம சோழன் காலத்திய கல்வெட்டு இருக்கிறது. இதில் வெள்ளலூரில் வாழ்ந்த ஒரு பிரிவினர் நன்கொடை வழங்கியதற்கான ஆதாரம் உள்ளது.

சந்திராதித்தன் குலத்தை சேர்ந்த கோக்கண்டன் வீரநாராயணன் காலத்து கல்வெட்டும் இருக்கிறது. வெள்ளலூரை சேரர் களப்பிரர்களும் ஆட்சி செய்துள்ளனர். வெள்ளம் புகுந்த ஊர். வேளாளர் ஊர் எனவும் வெள்ளலூர் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *