10,626 பேருக்கு நலத்திட்ட உதவி

கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா முடிந்த பணிகள் திறப்பு விழா நடக்கவுள்ளது. காலை 10 மணிக்கு நடக்கும் இந்த விழாவில், 12 புதிய பணிகளுக்கு 31 கோடி ரூபாய் செலவில் அடிக்கல் நாட்டப்படும். பள்ளி மைதானத்தில் 6500 சதுர மீட்டர் பரப்பில் 9.67 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரக்கிலான ஹாக்கி மைதானம் என 162.52 கோடி ரூபாய் மதிப்பிலான 107 திட்ட பணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.

குறிப்பாக நீண்ட காலமாக பணிகள் நடத்தப்பட்டு வந்த சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் பாலம், நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தினரால் கட்டப்பட்ட ஆர்எஸ்புரம். பேரூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகள் திறப்பு சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் திறப்பு வெள்ளலூரில் வணிக வளாகம் திறக்கப்படவுள்ளது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைக்கவுள்ளார். 10,626 பயனாளிகளுக்கு 136.45 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் வழங்கவுள்ளார். இதில் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *