11.59 லட்சம் பேருக்கு 347 கோடி பொங்கல் பணம்
கோவை மாவட்டத்தில் 11,59,274 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி பொங்கல் போனஸ் தொகை அனைத்து அரிசி ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. ஒரு கார்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் என மாவட்ட அளவில் 347 கோடி ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையாக வழங்கப்படும். வரும் எட்டாம் தேதி முதல் டோக்கன் முறையில் பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இத்துடன் வழக்கம்போல் பச்சரிசி சர்க்கரை கரும்பு போன்றவையும் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகையுடன் இலவச வேட்டி சேலையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் வர இருப்பதால் பொது மக்களுக்கு பரிசுத்தொகை மிகுந்த கவனிப்புடன் வழங்கப்பட உள்ளது.
