2 நாள் வாக்காளர் முகாமில் 50 ஆயிரம் விண்ணப்பங்கள்..
கோவை மாவட்டத்தில் 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட அளவில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்தப் பணிகள் முடிவு பெற்றது
இந்த நிலையில் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க நேற்றும் இன்றும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் வாக்காளர்களாக பெயர் சேர்க்க 35,065 பேர் விண்ணப்பம் அளித்தனர். திருத்தம் செய்ய 14935 வாக்காளர்கள் விண்ணப்பம் வழங்கினர். பெயர் நீக்கம் செய்ய 813 பேர் விண்ணப்பித்தனர். மொத்தமாக இரண்டு நாள் முகாமில் 50813 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இதே போல் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
