20 லட்ச வாக்காளர்களை நீக்கியது எப்படி… தேர்தல் கமிஷன் கோவையில் ஆய்வு
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துணை தேர்தல் கமிஷனர் பானுபிரகாஷ் யக்ரூ, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், நீலகிரி ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் தொடர்பான பல்வேறு விவரங்களை கேட்டனர். பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குறிப்பாக முகவரி மாறி சென்றவர்கள், பட்டியலில் இடம் பெறாதவர்கள். ஆப்சென்ட் ஆனவர்களை மறுபடியும் எப்படி ஆய்வு செய்து கண்டறிவது புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது, நீக்கப்பட வேண்டியவர்கள் யாராவது பட்டியலில் இருந்தால் அவர்களை முறைப்படி நீக்கம் செய்வது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர் .
.வரும் பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகவுள்ளது. இதற்கிடையே வாக்காளர் சேர்ப்பு பணி நடக்கவுள்ளது. சனி, ஞாயிறு தினங்களை சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேலும் அரசியல் கட்சி பூத் ஏஜன்டுகள் மூலமாக ஓட்டு சாவடி வாரியாக பட்டியலில் உள்ள விவரங்களை சரி பார்த்து மறு ஆய்வு செய்யும் பணியும் நடத்தப்படவுள்ளது. இறுதி பட்டியலில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கம் கணிசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை திருப்பூர் ஈரோடு உட்பட ஆறு மாவட்டங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த நீக்கம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
