K. V

கோவை மணிக்கூண்டு பகுதியில் போலீசார் சோதனை

கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் இன்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கலாம் என இமெயில் மூலம் வந்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்தது. இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் இமெயில் மூலமாக இது போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. போலீசார் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.

Read More

குடிநீர் குழாய் உடைந்து ஊருக்குள் வெள்ளம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் தெருக்களில் பாய்ந்தது இது தொடர்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். பில்லூர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி இருக்கலாம் என தெரியவந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழாய் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

Read More

சார் எல்லாம் SIR மீட்டிங்கில் இருக்காங்க

கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் (SIR) தீவிரமாக நடக்குதாம். தினமும் காலை முதல் இரவு வரை வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் என என பல்வேறு தரப்பு அதிகாரிகள் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் கள ஆய்வு என தீயா வேலை செஞ்சுட்டு வராங்க. ஆனா தாலுக்கா உள்ளாட்சி அலுவலக வட்டாரங்களில் இதர வேலை எல்லாம் பெண்டிங் போட்டுட்டாங்களாம். குறிப்பா பொது மக்களின் பெட்டிசன்கள் முறையா கவனிக்காம இருக்கிறதா புகார் வந்திருக்கிறது. தேர்தல் கமிஷன் சொன்ன…

Read More

கோவையில் ரவுண்ட்ஸ் வந்த ஹெலிகாப்டர்

கோவை நகரில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று பல்வேறு பகுதிகளில் சுற்றி ரவுண்ட்ஸ் வந்தது. போவதும் வருவதுமாக தொடர்ந்து ஹெலிகாப்டர் சுற்றுவதை பார்த்த பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். என்ன ஏது எனக்கு விசாரித்த போது அது ஆன்மீக மையத்துக்கு வந்த மலையாள நடிகர் பயன்படுத்திய ஹெலிகாப்டர் ஆக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர். கோவை நகர போலீசார் விசாரித்த போது பைலட் பயிற்சிக்காக விமான நிலைய அனுமதியின் பேரில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் என தெரியவந்தது. அடடா இது தான் சமாச்சாரமா…

Read More

கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாள்-1 க்கான தேர்வு 15.11.2025 சனிக்கிழமை அன்று 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 3890 தேர்வர்கள் எழுதுகின்றனர். தாள்-2 க்கான தேர்வு 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 45 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வில் 12370 தேர்வர்கள் எழுதுகின்றனர். இத்தேர்வு மையங்களில் பள்ளிக்கல்வித்துறை மூலம் 4 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 15 வழித்தட அலுவலர்கள், 60 அலுவலர்கள், 970 அறைக்கண்காணிப்பாளர்கள், 51 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 120 நிலையான…

Read More