கோவையில் வணிக கேஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தம்: ஹோட்டல்களில் உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு..!
கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளது. 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய ஹோட்டல்கள் செயல்படுகிறது. தினமும் மூன்று லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் ஹோட்டல் உணவுகளை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. ஹோட்டல்களுக்கு வணிக சிலிண்டர்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வளைகுடா நாடுகளில் கடும் போர் ஏற்பட்டிருக்கிறது . இதன் காரணமாக இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் தடைப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கச்சா எண்ணெய் இல்லாத நிலையில் கேஸ்…
