form-6 ரெடி.. புதிய வாக்காளர்கள் சேர்க்க தீவிரம்…

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகள் நேற்றுடன் முடிவு பெற்றது. வரும் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதில் இணைக்கப்பட்ட வாக்காளர்கள் புதிய பட்டியலில் இடம் பிடித்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியும்.
வரும் 19ஆம் தேதிக்கு பிறகு புதிய வாக்காளர்கள் அதாவது 18 வயது நிரம்பிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்க்க தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மாவட்ட அளவில் லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர் சேர்ப்பு படிவம் form 6 பெறப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தாலுகா வாரியாக இந்த படிவங்கள் சப்ளை செய்யப்படும்.
