SIR படிவம் தர நாளை கடைசி..

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது. மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். 15.57 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது, இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். எஸ்ஐஆர் பணிகளில் படிவம் ஒப்படைக்க நாளை வரை ( 14ம் தேதி) அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்ப படிவம் வழங்காதவர்கள் தங்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய படிவம் பூர்த்தி செய்து தரலாம். வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகளின் செல்போன் எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் இதுவரை விண்ணப்ப படிவங்கள் ஒப்படைக்காமல் இருந்தால் இனியும் தாமதம் செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களின் விவரங்கள் அதற்கான தேர்தல் பிரிவு செயலியில் பதிவேற்றம் செய்வது வேகமாக நடக்கிறது.

மாவட்டத்தில் பெரிய சட்டமன்ற தொகுதியாக கவுண்டம்பாளையம் இருக்கிறது. இங்கே கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இன்று பணிகள் நிறைவு பெறும். அதற்கு பிறகு முகவரி மாறியவர்கள், ஆப்சென்ட் போன்ற விவரங்கள் கூடுதல் தகவல்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் நீக்கம் இருக்க வாய்ப்புள்ளது. ஓட்டு சாவடி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்கள் குறித்த விவரங்கள் தாலூகா வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *