SIR பணிகளை 4ம் தேதிக்குள் முடியுங்க…

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் 3117 ஒட்டு சாவடிகள் இருக்கிறது. சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு பூத் லெவல் ஆபீசர் (பிஎல்ஓ) என நியமிக்கப்பட்டு தேவையான படிவங்களை தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ளனர். பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் இந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

வரும் டிசம்பர் 4ம் தேதி வரை வீடு தோறும் சென்று பட்டியல் காண்பித்து தேவையான வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பாலான பிஎல்ஓக்கள் பணிகளை முடிக்கவில்லை. இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் சுருக்க திருத்த பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பொதுமக்களில் சிலர் குறிப்பாக படிக்காத வயதானவர்கள் படிவங்களை பூர்த்தி செய்ய இயலாத நிலையில் இருக்கின்றனர் தேவையான உதவிகளை செய்து படிவம் பூர்த்தி செய்து பெற வேண்டும். படிவங்களை பெறாமல் அப்படியே விட்டு விடக்கூடாது 100 சதவீதம் இந்த பணிகளை முடித்து தர வேண்டும்.

மேலும் சத்துணவுத்துறை, பள்ளி கல்வித்துறை வழங்கல் பிரிவு என சுருக்க திருத்த பணியில் இருப்பவர்களை அந்தந்த துறையின் அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல்களை சேகரிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது வரும் டிசம்பர் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தெரிகிறதுபடிசம்பர் 9ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி வரை உரிமை கோரல், மறுப்பு மனுக்கள் பெறப்படும். இதை தொடர்ந்து விசாரணை, சரிபார்ப்பு பணியும், பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடும் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இறந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்படுவர். அதே நேரத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு. பணியும் விடுபடாமல் நடக்கும் நிலையிருக்கிறது பல ஆண்டாக இறந்த வாக்காளர்கள் நீக்கப்படவில்லை. பட்டியலை தூய்மையாக்கும் நோக்கத்தில் பணி நடப்பதால் இறந்த வாக்காளர்கள் முழுமையாக நீக்கப்படுவர். இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *