சந்திர கிரகணம்: மருதமலை கோயில் நடை சாத்த உத்தரவு
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வரும் 3ம் தேதி மதியம் 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரஹணம் நடக்கவுள்ளது. இதன் காரணமாக பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் மதியம் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நடைதிறப்பு வரும் நான்காம் தேதி காலை 6 மணி அளவில் நடைபெறும். அந்த நேரத்தில் இருந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருகோயில் துணை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் கோவை…
