கோவையில் ரமலான் நோன்பு கஞ்சி வினியோகம்..
ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிக காலமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை நோன்பு நோற்று, இறை வழிபாடுகள் மற்றும் தர்ம செயலில் ஈடுபடுவது வழக்கமாகும். அந்த வகையில், கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில், நோன்பு திறக்கும் நேரத்தை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. சமூக ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நோன்பு கஞ்சி பெறுவதற்காக சிறுவர் முதல் முதியோர் வரை ஏராளமானோர்…
