கோவை மணிக்கூண்டு பகுதியில் போலீசார் சோதனை

கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் இன்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கலாம் என இமெயில் மூலம் வந்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்தது. இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் இமெயில் மூலமாக இது போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. போலீசார் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.

Read More