குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர். நடப்பாண்டில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். குறை தீர்க்கப்படுகிறதோ இல்லையோ கூட்டம் குறையவில்லை. தொடர்ந்து ஒரே பிரச்சனைக்காக பலமுறை மனு கொடுக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. கால் கிடைக்க மக்கள் கூட்டமாக காத்திருக்கும் நிலையை பார்த்தால் அதிகாரிகள் எந்த அளவுக்கு வேலை செய்கிறார்கள் என தெரிந்துவிடும்….

Read More

19 முறையாக வெடிகுண்டு மிரட்டல்…

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை ஒரு இமெயில் வந்திருந்தது. அதில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே இதே பெயரில் சில முறை இ மெயில் வந்திருந்தது. இதை தொடர்ந்து தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடக்டர் மூலமாக சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இதே போல் இமெயில் மூலமாக மிரட்டல்…

Read More

கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் வழங்கும் விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் மற்றும் பல்வேறு வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வங்கியில் சார்பில் கல்வி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Read More