கோவையில் அனுமதியற்ற போஸ்டர்களை கிழிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
கோவை மாவட்டத்தில் அரசு துறை, அரசு சார்பு துறைகளின் சுவர்கள், பொது இடங்கள், மேம்பால சுவர்கள், மின்சார கம்பங்கள், மரங்கள் என ஏகப்பட்ட இடங்களில் அரசியல் கட்சி அறிவிப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. மேம்பால சுவர்களில் கட்சிகளின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. கலெக்டர் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தெற்கு, வடக்கு தாசில்தார் அலுவலகம், ஜிஎச், பொதுப்பணித்துறை அலுவலகம் என ஏகப்பட்ட அலுவலகங்களில் போஸ்டர்கள் அகற்றிய பின்னரும், மீண்டும் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக புகார்…
