கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவ படை விரைவில் வருகை..!
கோவை மாவட்டத்தில் சூலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3524 ஒட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் 450 முதல் 500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோவை மாவட்டத்திற்கு வெளி மாநிலத்தினர் அதிகளவு வந்து செல்கிறார்கள். கடந்த கால தேர்தல்களின் போது கோவை மாவட்டத்தில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தது. மேலும் கோவை பதட்டமான…
