SIR தேதி மேலும் நீட்டிப்பு..

தமிழகத்தில் எஸ் ஐ ஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் நடக்கிறது. இதில் பல மாவட்டங்களில் பணிகள் முடியவில்லை. ஏற்கனவே கடந்த நாலாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் இன்றுவரை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. ‌ இருப்பினும் பணிகள் முடியவில்லை. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கான உத்தரவை தேர்தல் கமிஷன் பிறப்பித்துள்ளது.

Read More

கோவையில் 1.13 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் மாவட்ட அளவில் 32 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் எஸ் ஐ ஆர் என்ற சுருக்கத் திருத்த பணிகள் ஒரு மாதம் நடந்தது. இதில் இன்று இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் வெளியானது. மாவட்ட அளவில் 1,13,592 வாக்காளர்கள் இறந்து விட்டதாக கூறி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். 2,91,928 பேர் முகவரியில் இல்லை என தெரியவந்துள்ளது. சுமார் 76096 வாக்காளர்கள் கணக்கெடுப்பின்போது இல்லை என…

Read More