ஏய் ஏறி வாயா, விடாத.. பயர் மேன்களுக்கு பயிற்சி..

கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மண்டல அளவில் 41 தீயணைப்பு துறையினருக்கு கமாண்டோ பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆற்றை நீந்தி கடப்பது, உயரமான கட்டடங்களில் ஏறுவது, அபாயகரமான கட்டடங்களில் ஆட்களை மீட்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று அலுவலகத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் கயிறு மூலமாக ஏறும் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் மயக்கமடைந்தவர்களை கயிறு மூலமாக கீழே இறங்குவது குறித்த செயல் விளக்கமும் காண்பிக்கப்பட்டது.

Read More