கோவையில் 34 லட்சம் பேருக்கு ரேஷன் அரிசி…!
கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில், 11,58,798 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. நடப்பாண்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. புதிய ரேஷன்கார்டுகள் தடையின்றி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழங்கல் துறையினர் சார்பில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக 34,25,505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 34,06,543 பேரின் ஆதார் பதிவுகள் பெறப்பட்டிருக்கிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகமாகி…
