கோவையில் ஊருக்குள் புகுந்த 3 யானைகள் ; ஹாரன் அடித்து விரட்டியதால் பரபரப்பு..!
கோவை குப்பனூர் தீத்திபாளையம் பகுதியில் நேற்று மூன்று யானைகள் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தன . யானைகள் வாழைத்தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்த நீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தன. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் யானைகளை வாகனங்களில் சென்று ஹாரன் சத்தம் மூலமாக விரட்டினர் . மூன்று பெண் யானைகள் வாகனங்களின் சத்தம் கேட்டு வேகமாக ரோடு வழியாக ஓட்டம் பிடித்தன. தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டே…
