கோவையில் குப்பைக்கு போன 5.5 டன் குட்கா..!
கோவை காட்டூர் சாய்பாபா காலனி செல்வபுரம் துடியலூர் பீளமேடு கவுண்டம்பாளையம் கரும்பு கடை போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த சில மாதங்களில் குட்கா பான்பராக் கணேஷ் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 43 வழக்குகளில் 5.5 டன் எடையிலான போதைப்பொருட்கள் கோவை மாநகர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்த போதை பொருட்கள் அனைத்தும் இன்று வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி தீ வைத்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 55 லட்சம்…
