கோவையில் போதையில் 4 பேர் சாக்கடையில் விழுந்ததால் பரபரப்பு
கோவை பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் மதுபான கடை உள்ளது .இதில் மது வாங்கி குடித்த நான்கு பேர் அதிக போதையில் தள்ளாடி பாதை தெரியாமல் சென்று அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் விழுந்துவிட்டார்கள் . அதில் இரண்டு பேர் கழிவுநீரில் தலைகீழாக கவிழ்ந்து விட்டார்கள் . இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை உடனடியாக மீட்டனர். இன்னும் இரண்டு பேர் சாக்கடைக்குள் படுத்து உருண்டு தள்ளாடிக் கொண்டே இருந்தனர். இது தொடர்பாக பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது….
