கோவையில் ஏலம் போகாத டாஸ்மாக் பார்கள் விரைவில் மூட உத்தரவு..
கோவை மாவட்டத்தில் வடக்கு கலால் எல்லைக்குள் 156 டாஸ்மாக் மதுபான கடைகளும், தெற்கில் 127 மதுபான கடைகளும் செயல்படுகிறது. இந்த கடைகளுக்கான பார்களுக்கு ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் பெரும்பாலான மதுபான கடை பார்கள் ஏலத்திற்குள் வரவில்லை . தெற்சில் 25 பார்களும், வடக்கில் 27 பார்களும் நேற்று ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆன்லைனில் டெண்டர் விண்ணப்பம் செலுத்தியவர்கள் மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேலாளர், கலால் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலத்தில் பங்கேற்றனர்.
ஏல தொகை கட்டுபடியாகாத நிலையில் தெற்கில் 20 பார்கள் ஏலம் போகாமல் நிறுத்தப்பட்டது. வடக்கில் 11 பார்கள் ஏலம் போனது. 14 பார்கள் ஏலம் போகவில்லை. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்தினரிடம் கேட்ட போது “மாவட்ட அளவில் 283 மதுபான கடை பார்களில் பெரும்பாலான பார்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 6 மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த பார்கள் வரும் ஜூன் மாதம் வரை செயல்படும். அதற்கு பின்னர் ஏலத்திற்கு கொண்டு வரப்படும் தற்போது விடுபட்ட சில பார்களுக்கு ஏலம் விடப்பட்டது. இதிலும் பெரும்பாலான நபர்கள் ஏலம் எடுக்கவில்லை. விடுபட்ட பார்களுக்கு மறு ஏலம் விடப்பட மாட்டாது.
ஏனெனில் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலைமை இருக்கிறது. எனவே மறு ஏலம் விட மாட்டோம். ஏலம் போகாத பார்கள், அனுமதி பெறாத பார்கள் விரைவில் மூடப்படும், “என்றனர்.
