கோவை மாவட்டத்தில் 26. 96 லட்சம் இறுதிப்பட்டியல் வாக்காளர்கள்..
கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது . கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பட்டியலை வெளியிட்டார்.இதில் மாவட்ட அளவில் 26,96, 813 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண் வாக்காளர்கள் 1300889, பெண் வாக்காளர்கள் 1395396 மூன்றாம் பாலினத்தினர் 52 8 பேர் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிகபட்சமாக 407507 வாக்காளர்களும் வால்பாறையில் குறைந்தபட்சமாக 172284 வாக்காளர்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 19-12-2025 தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 25,74,608 பேர் இடம் பெற்றிருந்தனர் தற்போது வெளியான பட்டியலில் கூடுதலாக 1,22,608 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் 19ஆம் தேதி முதல் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வரை கூடுதலாக இத்தனை வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய வாய்ப்புள்ளது. Voters.eci.gov.in என்ற வெப்சைட் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம். மேலும் இன்று வெளியான வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்காளர் பதிவு அலுவலகங்கள் ஓட்டு சாவடி மையங்கள் போன்றவற்றில் நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
