300 அணிகளுக்கு ‘கிரிக்கெட் கிட் பேக்’ வழங்கினார் இன்ஜினியர் சந்திரசேகர்..!

கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, புரட்சித் தமிழர் எடப்பாடியார் பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழாவாக அதிமுகவினர் கொண்டாடினர்.

வடவள்ளி பகுதியில் நடந்த விழாவில் எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் இன்ஜினியர் சந்திரசேகர் 300 கிரிக்கெட் அணிகளுக்கு 300 கிரிக்கெட் கிட் பேக் வழங்கினார். இதைப் பெற்றுக் கொண்ட கிரிக்கெட் அணி வீரர்கள் சந்திரசேகருக்கு நன்றி தெரிவித்தனர்.

இன்ஜினியர் சந்திரசேகர் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் . பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக உள்ள சந்திரசேகர் மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் பாரா ஒலிம்பிக் வீரர்களுக்கு போட்டிகளில் பங்கேற்கவும் பயிற்சி பெறவும் உதவி செய்துள்ளார்.

வடவள்ளி, மருதமலை, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார் அந்த வகையில் தற்போது கிரிக்கெட் வீரர்களுக்காக 300 கிட் பேக் வழங்கியது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அதை தீர்க்கும் வகையில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உத்தரவின் கீழ் அதிமுகவினர் தீவிரமாக பணியாற்றுகின்றனர். பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிமுகவிற்கு ஏக வரவேற்பு இருப்பதாக இந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் விழாவில் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன் , கே ஆர் ஜெயராமன், மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *