கோவையில் எஸ் பி வேலுமணிக்கு எதிராக போஸ்டர்..!

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மீண்டும் அதிமுக ஆட்சி, மக்கள் எதிர்பார்ப்பு என்ற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது ஆதரவாளர் மூலமாக இந்த போஸ்டர் ஒட்டி இருப்பதாக தெரிகிறது.

இதற்கு போட்டியாக திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி நம்ம தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம் என பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருக்கிறார். அதிமுக மற்றும் திமுக இடையே இந்த போட்டி போஸ்டர்கள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே நகரில் சில இடங்களில் அதிமுக போஸ்டர்களுக்கு எதிர்ப்பாக திமுகவினர் சில இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிற்கு அதிமுகவினர் பல இடங்களில் போஸ்டர் ஒட்டி இருந்தனர் .

அந்த இடங்களில் திமுகவினரும் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா போஸ்டர் ஒட்டி இருந்தனர். கடந்த முறையை போல் இந்த முறையும் கோவையை விட்டு தர மாட்டோம். கட்டாயம் ஜெயிப்போம் என திமுகவினர் சபதம் எடுத்து கோவை நகர் மற்றும் புற நகர் பகுதியில் போஸ்டர் அரசியலை தீவிர படுத்திருப்பதாக தெரிகிறது. பல இடங்களில் இந்த போட்டி போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *