நீட் தேர்வினால் மாணவி தற்கொலை கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி அனு கீர்த்தனா. நீட் மறு தேர்வு காரணமாக இன்று மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் மற்றும் தெற்கு ஆர்டீ ஓ மாருதி பிரியா தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இறந்த மாணவியின் குடும்பத்தினர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி இது போன்ற தற்கொலை மரணங்கள் தொடர்ந்து நீடிப்பதை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினர். சிறிது நேரம் நடந்த மறியல் போராட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் மாநில அளவில் நீட் பிரச்சினையை மீண்டும் பூதாகரமாக கிளப்பி உள்ளது. பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். வினாத்தாள் கசிந்து நீட் மறு தேர்வு நடத்தப்பட்டதால் மாணவ மாணவிகள் மீண்டும் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *