Tamil Nilam app: நத்தம் ரயத்துவாரி நிலம் எங்கே…

தமிழக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை மூலமாக www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை தேசிய தகவல் மையம் மூலம் உருவாக்கியுள்ளது.

அதில், பட்டா மாறுதலுக்கான – தமிழ் நிலம் செல்போன் செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் செய்வதற்கான விண்ணப்பிக்க ஏதுவான https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் (ஊரகம்), மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ பதிவேடு, அரசு புறம்போக்கு நிலவிபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் |விண்ணப்ப நிலை விபரங்களை அறியும் eservices.tn.gov.in என்ற இணையதளமும் அத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்க பட்டியல்கள் விபரங்கள் போன்றவைகளையும் பதிவிறக்கம் செய்ய வசதி இருக்கிறது. ஆனால் அரசு புறம்போக்கு, நத்தம், சர்க்கார் புறம்போக்கு மற்றும் ரயத்துவாரி மனையிடங்கள் தொடர்பான முழு விவரங்கள் தமிழ் நிலத்தில் சேர்க்கப்படவில்லை.

பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலங்களை வாங்காமல் தவிர்க்க, சர்வே எண் விவரங்களில் உள்ள குழப்பங்களை சரி செய்ய தமிழ் நிலம் செயலில் போதுமான உள்ளீடு செய்யப்படவில்லை. எல்லைகள் மற்றும் மேப் சரியான முறையில் பொருந்தும் வகையில் இந்த செயலியை மேலும் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *